அப்பல்லோவில் ரஜினி!

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவர்களிடம் நடிகர் ரஜினி நலம் விசாரித்தார்.

rajini

உடல்நலக் குறைப்பாட்டின் காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்.,22 ம் தேதியிலிருந்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என அப்பல்லோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவரது உடல்நிலை குறித்து கேட்டறிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள். நடிகர்கள் என பல தரப்பினரும் அப்பல்லோவிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் நேற்று(16-10-16) மாலை அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அவர் முதல்வரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அவர்கள் இருவரும் ஒரே காரில் வந்து சென்றனர்.

முன்னதாக, ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மறுநாளே நடிகர் ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில், ” அன்புள்ள சி.எம். அவர்கள் விரைவில் நலமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று வாழ்த்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts