அப்துல் கலாம் காலமானார்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டொக்டர் அப்துல் கலாம் தனது 83வது வயதில் நேற்று காலமானார்.

Abthul-kalam

மேகாலய மாநில தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) நேற்று நடைபெற்ற கருத்தரங்கில், கலாம் கலந்து கொண்டு, மேடையில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதனால் மயங்கி சரிந்த அவர் அங்குள்ள பெத்தானி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து இராணுவ மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் குழு வரவழைக்கப்பட்டது.

இந்த மருத்துவர்கள் அப்துல் கலாமின் உடல்நிலையை பரிசோதனை செய்து, தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அப்துல் கலாமின் உயிர்பிரிந்தது.

இதேவேளை இவரது மறைவை முன்னிட்டு 7 நாள் துக்கம் அனுஷ்ரிக்கப்படும் என்று இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

Related Posts