இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், அணு ஆராய்ச்சியாளருமான அப்துல் கலாம் அவர்கள் 27.07.2015 அன்று திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இவர் கடந்த மாதம் இலங்கை சென்று வந்தது அனைவரும் அறிந்ததே.
இலங்கையின் ஆட்சி அமெரிக்கா சார்பானதும் கூட, இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அப்துல் கலாம் அவர்கள் உடனே உயிரிழந்தது பெரும் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக, ரஷ்யாவை மையமாக கொண்டு இயங்கும் புலனாய்வு ஊடகம் ஒன்று இந்த செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுவாக மாரடைப்பு வருவதற்கு காரணம், இதயத்திற்குச் செல்லும் குழாய்களில் கொலஸ்ரோல் படிந்து அவை திடீரென அடைபடுவதே ஆகும்.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் , அவருக்கு அந்நாட்டில் பெரும் மருத்துவ வரப்பிரசாதங்கள் உள்ளது.
மேலும் வி.ஐ.பி க்களை கவனிக்கும், மருத்துவர்களே அப்துல் கலாமையும் கவனித்து வந்தார்கள். உடலில் கொலஸ்ரோல் அதிகமாக இருப்பது, ஏன் மாரடைப்பு வருமா என்பதனை கூட முன் கூட்டியே அறியும் பரிசோதனைகள் தற்போது சாதாரண மக்களுக்கு கூட கிடைக்கிறது.
எனவே மருத்துவர்கள் நிச்சயம் இதனை அப்துல் கலாமிற்கு பரிசோதனை செய்து பார்த்திருப்பார்கள்.
இந்நிலையில் எப்படி திடீரென அவருக்கு மாரடைப்பு வந்தது?
மேலும் அவர் தனது வயதைக் கருத்தில் கொண்டு நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்டு வந்த மனிதர். மிகுந்த கல்வியறிவுடையவர். அவருக்கு இதுபோன்ற தீடீரென மாரடைப்பு வர என்ன காரணம் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அவர் கடந்த மாதம் இலங்கை சென்றவேளை, அங்கே வைத்து அவருக்கு சி.ஐ.ஏ அல்லது அமெரிக்க உளவு நிறுவனத்தின் ஏதாவது ஒரு அமைப்பு ஸ்லோ பொய்சன் (Slow Poison) என்று சொல்லக் கூடிய மெதுவாகக் கொல்லும் துகள்களை அவருக்கு கொடுத்திருக்கலாம் என்று ரஷ்ய புலனாய்வு ஊடகம் கருத்து வெளியிட்டுள்ளது.
இதுபோன்ற துகள்களை உணவில் அல்லது குடிக்கும் பானத்தில் கலந்தால், ஒரு சில மாதம் கழித்து அதனை உட்கொண்டவர் திடீரென இறப்பது வழக்கம். அதிலும் பெரும்பாலும் அவர்கள் இதயம் செயல் இழந்து விடுகிறது.