காணிப் பிரச்சினை தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இடம்பெற்ற காரசாரமான விவாதத்தைத் தொடர்ந்து, அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரும் வடக்கு முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் வெளிநடப்புச் செய்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம், நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.
இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் காணியற்ற மக்களுக்கு காணி வழங்குவது தொடர்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளிநடப்பு செய்ததோடு, அவரை தொடர்ந்து வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனும் வெளிநடப்புச் செய்துள்ளார்.