வீதி விதிமீறல்கள் தொடர்பாக பரிந்துரைக்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாய் அபாராதத் தொகையை 3 ஆயிரம் ரூபாவாக குறைப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாகன போக்குவரத்து சட்டங்கள் கீழான 3 கட்டகளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தெரிவுசெய்யப்பட்ட 33 வீதி விதிமீறல்கள் தொடர்பில் அபராதத் தொகையை அறவிடுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மோட்டார் சைக்கிள்களின் தலைக்கவசங்களுக்கு எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் கூலிக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் மற்றும் பொருட்கள் கொண்டு செல்லும் முச்சக்கர வண்டிக்கு டெக்சி மீட்டர் இருத்தல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த 25 ஆயிரம் ரூபாய் அபாராதத் தொகை அதிகம் என சமீபகாலமாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.