மானிப்பாய் கட்டுடை பகுதியில் ஒருவரை வெட்டுவதற்கு எடுத்துச் சென்ற கைக்கோடரி மற்றும் வாளுடன் இரண்டு இளஞர்களை மானிப்பாய் இரகசியப் பொலிஸார் நேற்று (10) கைது செய்துள்ளனர்.
கைதான நபர்கள் இருவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 18, 20 வயதுடைய இளஞர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தனிப்பட்ட பிரச்சினை ஒன்றிற்காக இளைஞன் ஒருவரை இவர்கள் இருவரும் வெட்டுவதற்கு முயற்சி செய்ததாக பொலிஸார் கூறினர்.
இவர்கள் மொட்டைசிவா கெட்டசிவா குழுவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
கைதான இரண்டு இளைஞர்களையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.