டெங்கு பரவக்கூடிய சூழலை வைத்திருந்த 7 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.கருணாகரன், நேற்று (20) உத்தரவிட்டார்.
தாவடிப் பகுதியில் டெங்கு பரவ கூடிய சூழலை வைத்திருந்த 7 பேருக்கு எதிராக, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, திங்கட்கிழமை (20) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே 7 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார். அபராதத் தொகையைச் செலுத்தி விட்டு வெளியே வந்த ஒருவர் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவருக்கு முதலுதவியளித்து அனுப்பி வைத்தனர்.