‘அன்னம்’ சின்னத்தில் போட்டியிடுகிறார் சஜித்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டுள்ளார்

இந்நிலையில் அவர், ‘அன்னம்’ சின்னத்தின் கீழ் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசநேற்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

சிறிகொத்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயர் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டது.

இதையடுத்து தான் ‘அன்னம்’ சின்னத்தில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Related Posts