அன்னதான சமையலில் ஈடுபடுவோருக்கு மருத்துவச்சான்றிதழ் அவசியம்!

கோவில் திருவிழாக்களில் இடம்பெறும் அன்னதான நிகழ்வுகளுக்கு சமையலில் ஈடுபடுவோர் மருத்துவ அறிக்கை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். உரிய மருத்துவ பரிசோதனை அறிக்கை கைவசம் வைத்திருக்காமல் சமையலில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சாவகச்சேரி சுகாதாரத்திணைக்களம் அறிவித்துள்ளது.

தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள பெருமளவு கோவில்களில் திருவிழாக்கள் மற்றும் பொங்கல் உற்சவங்கள் இடம்பெற்று வருகின்றன.

திருவிழாக்களை முன்னிட்டு கோவில்களில் அன்னதானம் நடைபெற்று வருகின்றன. அன்னதானச் சமையலில் ஈடுபடுவோர் சுகாதார மருத்துவ அதிகாரிப் பணியகத்தில் மருத்துவச் சான்றிதழ் பெறாத நிலையில் சமையலில் ஈடுபடுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அன்னதான நிகழ்வுகளுக்கு சமையலில் ஈடுபடுவோர் மருத்துவப் பரிசோதனை அறிக்கை பெற்றிருத்தல் வேண்டும். உரிய மருத்துவச் சான்றிதழ் இன்றி சமையலில் ஈடுபடுவோர் பிடிக்கப்படின் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் கோவில் நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

Related Posts