அனைவரையும் கண்கலங்க வைத்த மஹேல

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன இறந்துபோன தனது சகோதரனை நினைத்து கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.காலி காராப்பிட்டி வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவை ஸ்தாபிக்கும் நோக்குடன் (TRAIL WALK ) நடைபவனி இடம்பெற்று வந்தது.

mahela-trail

இதன் நிறைவு நாளான நேற்று காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் குறித்த புற்றுநோய் சிகிச்சைப்பிரிவுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது மேடையில் அமர்ந்திருந்த இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் குறித்த நிதி சேகரிப்பு அறக்கட்டளை அமைப்பின் தூதுவருமான மஹேல ஜெயவர்தன திடீரென கண்ணீர் விட்டு அழுதார். இது அங்கிருந்த மக்கள் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

அந்தவேளையின் மஹேல, கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோன தனது சகோதரனை நினைத்தே கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.இலங்கையில் புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்றுநோய் தொடர்பான சிறப்பு சிகிச்சைப்பிரிவொன்றை அமைக்கவும் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்களான மஹேல ஜெயவர்தன குமார் சங்கக்கார, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என பலர் (TRAIL WALK ) நடை பவனியில் கடந்த 28 நாட்களான வடக்கிலிருந்து தெற்கு வரை சுமார் 645 கிலோ மீற்றர் தூரம் நடைபயணம் மேற்கொண்டு நிதி திரட்டி வந்தனர்.குறித்த நிகழ்வில் மஹேல ஜெயவர்தன உரையாற்றும் போது ,

நான் மீண்டெழ முடியாத துயரத்திற்குள்ளாகியிருந்தேன். எனது சகோதரன் என்னை விட்டுப்பிரிந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகின்றது. அன்று புற்றுநோய்குரிய சிகிச்சை மேற்கொள் போதிய வசதியில்லாமலிருந்தது.

இவ்வாறானதொரு நிலையிலேயே இந்த முயற்சியை மேற்கொள்ள தள்ளப்பட்டேன். சகோதரன் நாதன் எனக்கு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தார்.கடந்த 28 நாட்களும் என் வாழ்நாளில் மறக்கமுடியாத அழகான தருணங்கள்.

இந்த முயற்சிக்கு நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் இன,மத, மொழி பாகுபாடின்றி ஒத்துழைப்பு வழங்கினர். எமது நாட்டு மக்கள் எவ்வளவு தியாகம் நிறைந்தவர்கள். அழகானவர்கள் மற்றும் அவர்களின் மனங்களில் என்ன உள்ளதென்பதை உணர்ந்து கொண்டேன்.

எமது நாட்டில் இன்னும் பல பிரச்சினைகள் உள்ளன. அதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முகங்கொடுக்க வேண்டும். நாம் எல்லோரும் இலங்கை மக்கள்.வடக்கின் பருத்தித்துறை பேதுரு முனையிலிருந்து தெற்கே மாத்தறை வரை எமது பயணத்தை மேற்கொண்டுள்ளோம்.

இத் திட்டத்தின் இறுதியில் வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டு ,அதில் முதலாவது நோயாளி சிகிச்சைபெறும் போது நாமெல்லோரும் மனநிறைவடைவோம். இதில் பங்குகொண்டமைக்கு.இதில் நாம் இன்னமும் வெற்றியடையவில்லை. வெற்றியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றோம் என இதன் போது மிகவும் கவலையுடன் தெரிவித்திருந்தார்.

Related Posts