அனைவரும் வாக்களியுங்கள்

வாக்களிப்பது மக்களின் உரிமை மற்றும் அவர்களுடைய பொறுப்பாகும். வாக்களிப்பதில் இருந்து விலகியிருக்காமல் வாக்களிப்பு நிலையத்துக்கு அச்சமின்றி சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சகல வாக்காளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

போதை மற்றும் வன்முறைகள் இன்றி செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சட்டங்களை உருவாக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்கின்ற இந்த தேர்தலில் சட்டத்தை மீறுகின்ற சம்பவங்கள் இடம்பெறுமாயின், சட்டத்தை மீறுகின்றவர்களை கைதுசெய்யுமாறும் அவர்களை பொலிஸ் பிணையில் விடுவிக்காமல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts