அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது இலங்கை அணி

நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டுனெடினில் நடைபெற்று வருகிறது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 292ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அணி சார்பாக மெத்திவ்ஸ் 77 ஓட்டங்களையும், சிறிவர்தன 62 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள நியூஸிலாந்து அணி சற்றுமுன்னர் வரை 6 விக்கட்டுக்களை இழந்து 188 ஓட்ங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.

Related Posts