அனைத்து மருந்துப் பொருட்களுக்கும் இன்று முதல் கட்டுப்பாட்டு விலை!!

அனைத்து மருந்துப் பொருட்களுக்கும் கட்டுப்பாட்டு விலை இன்று முதல் அமுலாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக பல மருந்துப் பொருட்களின் விலைகளும் குறைவடையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறு மருந்துப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை அமுலாக்கப்படவுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் எதிர்காலத்தில் குருதி பரிசோதனைகளை இலவசமாக மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts