அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

மே 6ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு (Ministry of Education) அறிவித்துள்ளது.

அத்துடன், முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கை எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

மேலும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் மே மாதம் 14 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் ஓகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டு ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts