அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று முதல் விடுமுறை!!

நாடளாவிய ரீதியில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்றுடன் (26.05.2023) விடுமுறை வழங்கப்படவுள்ளது.

2022ஆம் கல்வி ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

மேலும் அடுத்த மாதம் 12ஆம் திகதி பாடசாலையின் கற்பித்தல் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Posts