அனுஷ்காவை பேட்டி எடுத்த கெளதம்மேனன்!

கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருந்து வரும் கெளதம்மேனன், சில படங்களையும் தயாரித்தவர். இந்நிலையில், தற்போது அவர் யு-டியூப்பில் ஒரு சேனல் தொடங்கியிருக்கிறார். அந்த சேனலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காபி வித் டிடி, ஜி தமிழில் ஒளிபரப்பாகும சிம்ப்ளி குஷ்பு நிகழ்ச்சிகள் போன்று சினிமா பிரபலங்களிடம் தான் பேட்டி எடுக்கிறாராம் கெளதம்மேனன்.

அந்த வகையில், தனது அபிமான நட்சத்திரங்கள் சிலரை அடுத்தடுத்து பேட்டி எடுக்க முடிவு செய்துள்ள கெளதம்மேனன், முதல் நபராக அனுஷ்காவை அழைத்து பேட்டி எடுத்திருக்கிறாராம். என்னை அறிந்தால் படத்தில் நடிப்ப தற்கு முன்பே கெளதம்மேனனின் தீவிர ரசிகையான அனுஷ்கா, அவர் அழைத்த அதேநாளில் தனக்கு பாகுபலி படப்பிடிப்பு இருந்தும் ஒருநாள் லீவு போட்டு விட்டு சென்னை வந்து அவரது கேள்விகளுக்கு சுவராஸ்யமான பதில்களை அளித்துள்ளாராம்.

ஆக, அனுஷ்காவை டைரக்டர் கெளதம்மேனன் எடுத்த அந்த பேட்டி விரைவில் யு-ட்யூப்பில் வெளியாகிறதாம். இதையடுத்து வேறு சில பிரபலங்களை பேட்டி காணவும் அழைப்பு விடுத்துள்ளாராம் கெளதம்மேனன்.

Related Posts