அனுராதபுரச் சிறையில் உண்ணாவிரதம் இருந்த தமிழ்க் கைதி ஒருவர் போகம்பரை சிறைக்கு மாற்றப்பட்டார்!

அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கண்டி நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை நடைபெறவுள்ளதால் குறித்த தமிழ் அரசியல் கைதி போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏனைய 16 கைதிகளும் தொடர்ந்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் 17 பேரும் கடந்த 21 ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் அனைவரும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தம்மை நீண்டகாலமாக விசாரணைகள் எதுவுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும், தம்மீதான வழக்கு விசாரணையை துரிதப்படுத்துமாறும் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts