உரிய முறையில் அனுமதி பெற்ற பின்னரே, முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலின் வருடாந்த மிருக வேள்வி பூஜையை நடாத்த முடியும் என உயர் நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.
முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் மிருக வேள்வி பூஜை தொடர்பான வழக்கு தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் சில விதிமுறைகளை நேற்று விதித்து தீர்ப்பளித்தது.
எந்தவொரு வணக்கஸ்தலத்திலும் மிருக பலி கொடுப்பதாயின் அதற்கான அனுமதி பெற்றுக்கொள்வதை கட்டாயமாக்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் பரிபாலகர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.