அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள் தொடர்புகொள்ள வலியுறுத்தல்

ஜீசிஈ உயர்தர பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜீசிஈ உயர்தர பரீட்சை எதிர்வரும் எட்டாம் திகதி தொடக்கம் நாடெங்கிலும் இரண்டாயிரத்து 230 நிலையங்களில் பரீட்சை இடம்பெறும்.

இது வரை காலமும் பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள் உடனடியாக பரீட்சை திணைக்களத்தை தொடர்பு கொள்ள வேண்டும். தொலைதூரத்தில் உள்ள பரீட்சார்த்திகள் தொலைபேசி ஊடாக பேசலாம். அழைக்க வேண்டிய இலக்கங்கள் 1911. அல்லது பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளையின் 0112 784 208, 0113 188 350, 0113 140 314 ஆகியவையாகும்.

இம்முறை சுமார் இரண்டு இலட்சத்து 37 ஆயிரத்து 943 பாடசாலை பரீட்சார்த்திகள் தோற்றுகின்றார்கள். தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 77 ஆயிரத்து 284 ஆகுமென பிரதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சரத் சந்திரசிறி தெரிவித்தார்.

தேசிய வானொலியில் ஒலிபரப்பான பரீட்சை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
இம்முறை தேவைகளைக் கொண்ட 260 விண்ணப்பதாரிகளும் பரீட்சைக்கு தோற்றுவதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சரத் சந்திரசிறி மேலும் கூறினார்.

Related Posts