கிளிநொச்சி நகர் பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 8 வர்த்தக நிலைய கட்டிடங்களை அகற்றுவதற்கான தீர்மானம், கரைச்சிப் பிரதேச சபையால் எடுக்கப்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச சபையின் பொது சுகாதாரப் பரிசோதகர் ப.சிவகுமார் வெள்ளிக்கிழமை (05) தெரிவித்தார்.
கிளிநொச்சி நகர், ஏ-9 வீதியில் பிரதேச சபையின் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 15 இற்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றது.
இவற்றில் முதற்கட்டமாக 8 கட்டிடங்கள் அகற்றப்படவுள்ளன.
மிகுதி 7 கட்டிடங்களை அகற்றுவது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு இடிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
உள்ளுராட்சி சபை சட்டத்தின் பிரிவு 52 இன் கீழ் எந்த அனுமதியும் பெறாத கட்டிடங்களையும் பிரதேச சபையின் தீர்மானத்திற்கு அமைய தவிசாளரது அனுமதியுடன் இடித்து அகற்ற முடியும் என கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் கூறியதற்கமைய மேற்படி 8 கட்டிடங்களும் அகற்றப்படவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.