அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘வேதாளம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், டீசர் பல்வேறு சாதனைகளையும் முறியடித்து வருகிறது.
இதனால், இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதன்படி, இப்படத்தின் பாடல்களை வரும் அக்டோபர் 16-ந் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அக்டோபர் 16-ந் தேதி இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினத்திலேயே படத்தின் பாடல்களை வெளியிடலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். லட்சுமிமேனன், அஸ்வின் கக்குமனு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
அஜித் இப்படத்தில் டான் மற்றும் கால் டாக்சி டிரைவர் என இரு வேறு கெட்டப்புகளில் நடிப்பதாக கூறப்படுகிறது. வரும் தீபாவளிக்கு படம் வெளியாகிறது.