அனிருத் பாடிய ப்ரண்ட்ஷிப் பாடல்!

சிவகார்த்திகேயனுக்காக பூமி என்ன சுத்துதே, உன் விழிகளில், காதல் கண் கட்டுதே என பல பாடல்களை பாடியவர் அனிருத். பின்னர், தனுசுக்காக வாட் எ கருவாடு, டானு டானு டானு, விக்ரமிற்காக மெர்சலாயிட்டேன், விஜய்க்காக பக்கம் வந்து, ஜெயம்ரவிக்காக டன்டனக்கா, விஜயசேதுபதிக்காக தங்கமே, அஜீத்துக்காக ஆளுமா டோளுமா என பல ஹீரோக்களுக்காக சூப்பர் ஹிட் பாடல்களை தனது இசையிலும், மற்றவர்களின் இசையிலும் பாடியிருக்கிறார் அனிருத். அப்படி அவர் பாடிய பெருவாரியான பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

இந்தநிலையில், தற்போது கார்த்தி நடித்துள்ள தோழா படத்திலும் கோபி சுந்தர் இசையில் ஒரு பாடலை பாடியிருக்கிறார் அனிருத்.

தோழா என் உயிர் தோழா என்று தொடங்கும் இந்த பாடலை நட்பின் ஆழத்தை சொல்லும் வகையில் எழுதியுள்ளாராம் மதன்கார்க்கி.

இளைஞர்களை கவர வேண்டும் என்பதற்காக தனது குரலை வித்தியாசப்படுத்தி இனிமையாக பாடியுள்ளாராம் அனிருத்.

காதல் தேசம் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் முன்பு பாடிய முஸ்தபா முஸ்தபா டோன்ட்வொரி முஸ்தபா -என்ற நட்பு பாடலைப் போன்று இந்த பாடலும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கிறார்களாம்.

தோழா படத்தின் இசை நாளை வெளியாக உள்ளது.

Related Posts