அனிருத்தை தட்டிக்கொடுத்த அஜித்!

விஜய்யின் கத்தி, அஜித்தின் வேதாளம் படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இளவட்ட ரசிகர்களை தன்பக்கம் முழுமையாக இழுத்துக்கொண்டவர் அனிருத்.

ஆனால், எதிர்பாராதவிதமாக பீப் சாங் சர்ச்சையில் சிக்கியதோடு, கபாலி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் வளர்ச்சியும் சேர்ந்து அனிருத்தை பின்தள்ளியது.

இருப்பினும் தற்போது சுதாரித்துக்கொண்டுள்ள அனிருத், கைவசமுள்ள அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் படங்களை வைத்து மறுபடியும் விட்ட மார்க்கெட்டை எட்டிப்பிடித்து விட வேண்டும் என்று முன்பை விட கூடுதலாக உழைத்துக்கொண்டிருக்கிறார்.

குறிப்பாக, முன்பெல்லாம் அவரிடம் பாடல் கேட்டு மாதக்கணக்கில் காத்திருப்பார்கள் டைரக்டர்கள். ஆனால் இப்போது டைரக்டர்கள் கேட்பதற்கு முன்பாகவே பாடலுடன் போய் நிற்கிறாராம் அனிருத்.

குறிப்பாக, அஜித்தின் 57வது படத்திற்கான டியூன்களை அஜித், டைரக்டர் சிவா ஆகியோர் பல்கேரியாவில் முகாமிட்டிருந்தபோதே அவ்வப்போது அனுப்பி ஓகே பண்ணிவிட்ட அனிருத், தற்போது அஜித்தின் ஓப்பனிங் பாடலுக்கு இசையமைத்து முடித்து விட்டாராம்.

அந்த பாடலை கிறிஸ்துமஸ்க்காக சென்னை வந்தபோது கேட்ட அஜித், இது ஆளுமா டோளுமாவை மிஞ்சும் பாடலாக இருக்கும் என்று அனிருத்தை தட்டிக்கொடுத்தாராம். தலயின் இந்த பாராட்டினால் கூடுதல் உற்சாகத்தில் மற்ற பாடல்களுக்கான இசைப்பணிகளில் ஈடுபட்டுள்ளார் அனிருத்.

Related Posts