அனிருத்தை கலாய்க்கும் சினிமா நண்பர்கள்!

3, எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, கத்தி, வேதாளம் என தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து கிடுகிடுவென வளர்ந்தவர் அனிருத்.

aniruth

பீல்டில் என்ட்ரியாகி சில வருடங்களிலேயே முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு இசைய மைத்ததோடு, முன்வரிசையில் இருந்து கொண்டிருந்த இசையமைப்பாளர்களுக்கும் பேரதிர்ச்சி கொடுத்தவர் அனிருத்.

ஆனால் அப்படி அவர் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தபோதுதான் பீப் பாடல் விவகாரம் அவருக்கு வேகத்தடையாக அமைந்தது. ஆனபோதும், இப்போது அதிலிருந்து மீண்டு, மீண்டும் மார்க்கெட்டில் பரபரப்பை கூட்டி வருகிறார் அனிருத்.

சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்ற ஐபா சினிமா விருது விழாவில் கலந்து கொண்டார் அனிருத். அப்போது அவர் மேடையேறியபோது மேடையில் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நடிகர் மிர்ச்சி சிவா, மைக்கை பிடித்து ஆளுமா டோளுமா பாடலை அனிருத் பாடுவதற்கு முன்பு, சில பீப் சவுண்டை ஒலிக்க வைத்து, கொஞ்சம் இருங்க, நீங்க பாட ஆரம்பிச்சதுமே பீப் சவுண்ட் கேட்குது என்று சொல்லி அனிருத்தை கலாய்த்தார்.

ஆனபோதும் அதற்கு எந்தவித கோபத்தையும் காட்டாமல் சிரித்தபடியே ஆளுடோ டோளுமா -பாடலை பாடினார் அனிருத்.

Related Posts