அனிருத்துடன் கூட்டணி சேர்ந்துள்ள ராகவா லாரன்ஸ்!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள “சிவலிங்கா” படத்தில் குத்துப் பாடல் ஒன்றை பாடியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் ரித்திகா சிங் நடித்துள்ள படம் “சிவலிங்கா”.அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.ராகவா லாரன்ஸ் படத்திலுள்ள பாடல்களில் நடன அசைவுகள் தூள் கிளப்பும் என்பதால்,அதற்கேற்ப குத்துப் பாடல்களாக தமன் இசையமைத்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் முக்கியமான குத்துப் பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார்.இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகவா லாரன்ஸ்,”முதல் முறையாக எனது படத்தில் அனிருத் பாடியுள்ளார்.இந்த பாடல் பக்கா மாஸாக இருக்கும்.அனிருத்திற்கு நன்றி.”என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சிவலிங்கா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.கூடிய விரைவில் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Related Posts