அனிருத்துக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன தனுஷ்!

அனிருத்தை இசையமைப்பாளராக்கியவர் தனுஷ். தனது மனைவி ஐஸ்வர்யா ஆர்.தனுஷ் இயக்கிய 3 படத்தில் தான் நாயகனாக நடித்ததோடு அனிருத்தை இசையமைப்பாளராக்கிய தனுஷ், அந்த படத்தில் ஒய் திஸ் கொலவெறி என்ற பாடலையும் எழுதி பின்னணி பாடியிருந்தார். அந்த பாடல் சூப்பர் ஹிட்டானதால் அது அனிருத்துக்கு திருப்புமுனையாக அமைந்ததோடு, அதன்பிறகு தனுசும் அதிகப்படியான பாடல்கள் பாட வழிவகுத்தது.

aniruth-danush

அதையடுத்து தனது படங்களில் அனிருத்துக்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்து வந்த தனுஷ், தங்கமகன் படத்திற்கு பிறகு தனது படங்களுக்கு வேறு இசையமைப்பாளர்களை இசையமைக்க வைத்து வந்தார்.

ஆனால் பீப் பாடல் சர்ச்சைக்கு பிறகு தனுஷ், அனிருத் உடனான உறவில் அவ்வளவாக சுமூகமாக உறவில்லை தொடர்ந்து தன் படங்களில் அனிருத்திற்கு வாய்ப்பு தந்த தனுஷ், இப்போது நான்கு படங்கள் வரை சந்தோஷ் நாராயணன், ஷான் ரோல்டன் போன்ற புதியவர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார்.

இதனால் தனஷ்-அனிருத் பிரிவு கிட்டத்தட்ட உண்மையானது. அதேசமயம் இதுப்பற்றி தனுஷ் நேரடியாக எதுவும் கூறவில்லை.

இந்த நிலையில், நேற்று அனிருத்துக்கு பிறந்த நாள் என்பதால் தனது டுவிட்டரில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் தனுஷ்.

Related Posts