அனிருத்திடம் இன்னொரு ஆளுமா டோளுமா கேட்ட ரசிகர்கள்!

வேதாளம் படத்தில் இடம் பெற்ற ஆளுமா டோளுமா பாடல் சூப்பர் ஹிட்டானதோடு, அந்த பாடலில் அஜித் வரிந்து கட்டி ஆடி தனது ரசிகர்களை சந்தோசப்படுத்தியிருந்தார். அதனால் பட்டி தொட்டியெல்லாம் கலக்கிய அந்த பாடலைப் போன்று அஜித்தின் புதிய படத்திலும் பாடல் இருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது அனிருத் இசையமைத்த ரெமோ படம் திரைக்கு வந்துள்ள நிலையில், அந்த படத்தினை பார்ப்பதற்காக அவர் சென்னையிலுள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க வந்தபோது, அவரை அங்கு கூடியிருந்த ரசிகர்கள் முற்றுகையிட்டனர். அதோடு, அடுத்து அவர் அஜித்தின் 57வது படத்திற்கு இசையமைத்து வருவதால், அந்த படத்திலும் ஆளுமா டோளுமா மாதிரியான பாடல் உள்ளதா? என்று அவரிடம் கேட்டனர்.

அதற்கு, வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆளுமா டோளுமா பாடல் போன்று இந்த படத்திலும் பாடல் இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக இந்த டிரண்டுக்கேற்ற ஒரு மாஸ் பாடல் படத்தில் உள்ளது. அது ஆளுமா டோளுமா போன்று அஜித் ரசிகர்களை துள்ளி குதித்து ஆட வைக்கும் என்றார்.

Related Posts