அனல் காற்றில் சிக்கி 21 பேர் பலி

கோடை வெயிலின் தாக்கம் ஆரம்பமாவதற்கு முதலாகவே ஏற்பட்டுள்ள வெப்பநிலையை அதிகரிப்பில் சிக்கி 21 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் 43 பாகை செல்ஷியஸை தாண்டி வீசும் வெப்ப காற்றினால் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத், ஆதிலாபாத், நிஜாமாபாத், திருப்பதி, நல் கொண்டா, கரீம்நகர் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலையானது சடுதியாக அதிகரித்து வருவதனால் குறித்த பிரதேசத்திலுள்ள மக்கள் வெளியில் நடமாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வயதானவர்கள் வெப்பநிலை அதிகரிப்பை சமாளிக்க முடியாமல் தவிப்பதாக குறித்த ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts