அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ள மக்கள் எவராயினும் 1919 என்ற இலக்கத்திற்கு அழைப்பினையேற்படுத்தி தகவல் அறிவிக்கலாம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அனர்த்தங்கள் தொடர்பில் அறிவித்தும் அனர்த்தம் இடம்பெற்றுள்ள பகுதிகளுக்கு இதுவரையும் அரச அதிகாரிகள் எவரும் விஜயம் செய்யவில்லை எனில் அல்லது அரச அதிகாரிகள் எவரதும் உதவிகள் இன்னமும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் “ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள்” 1919 இற்கு உடனடியாக தெரியப்படுத்துங்கள் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.