நேற்று (5) வடமாகாணசபை உறுப்பினரான அனந்தி எழிழன் அவர்கள் சக்தி தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சியான மின்னல் நிகழ்சியில் பங்கேற்பதை தடுக்க மாவையும் இந்தியாவும் முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக அனந்தி எழிழன் அவர்கள் தனக்கு பாராளுமன்ற தேர்தலில் கூட்டமைபின் சார்பில் போட்டியிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அது குறித்து தமிழரசுக்கட்சி மௌனம் சாதித்திருந்ததன் பின்னணியில் அவர் தனக்கு சந்தர்ப்பம் வழங்காவிடில் பிறிதொரு கட்சியில் போட்டியிட தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தார்.
ஆரம்பத்தில் இருந்து அனந்தி அவர்கள் தமிழரசுக்கட்சியுடன் முரண்பட்டுவந்த நிலையில் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அனந்தி மின்னல் நிகழ்சியில் தோன்ற உள்ளார் என்று விளம்பரப்படுத்தப்பட்டது அதனையடுத்து தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் ரங்கா அவர்களை ஏன் அனந்தியை தற்போது அழைக்கின்றீர்கள் அவரை நிகழ்சியில் அழைக்கவேண்டாம் என்று அச்சுறுத்தியதாகவும் அதற்கு அவர்கள் மறுத்ததை அடுத்து இந்திய துாதரகத்தில் இருந்து அழைப்பு எடுக்கப்பட்டு அனந்தியை அனுமதிக்கவேணடாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தெரியவருகின்றது. அதற்கு சக்தி ஊடகம் மறுத்திருந்தது. இருந்த பொழுதிலும் அவர் மின்னல் நிகழ்சியில் தோன்றி விளக்கமளித்தார்