அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றால் வௌியிடப்பட்ட செய்தி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தனிப்பட்ட கவனத்தை செலுத்தியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன விவசாய அமைச்சராக இருந்த காலத்தில் அவரது செயற் குழுவின் உறுப்பினர் ஒருவரால், அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுக்கு இலஞ்சம் வழங்கப்பட்டதாக, அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டிருந்தது.
இந்தநிலையில் அந்த விடயத்தில் எந்தவொரு தொடர்போ பங்களிப்போ தனக்கு இல்லை என, மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த விடயம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஜனாதிபதியால் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டுள்ளதாவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.