அநுராதபுரம் சிறையிலுள்ள அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் நீண்டகாலமாக சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் இன்று புதன்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த சிறைச்சாலையில் உள்ள 25 தமிழ்க் கைதிகளே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார்.

நாளை அல்லது நாளை மறுதினம் அளவில் குறித்த கைதிகளை நேரில் சென்று பார்வையிடவும் தீர்மானித்திருப்பதாக அருட்தந்தை மேலும் கூறினார்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியும், பல வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீதான வழக்குகள் தமிழ் பிரதேசங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ் அரசியல் கைதிகள் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

Related Posts