அநாகரிகமாக நடந்து கொள்ளும் ஊழியர்கள்

நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களின் ஊழியர்கள், தாங்கள் வழங்கும் கடன்களை அறவிடும் போது, மக்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்வதாக. பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அண்மையில் ஊற்றுப்புலம் கிராமத்துக்குச் சென்ற கிளிநொச்சியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றின் கடன் அறவிடும் ஊழியர் ஒருவர், அன்றைய மாதாந்தக் கடன் தவணைப் பணத்தை மீளச் செலுத்தத் தவறிய ஒருவரை, பணத்தைக் கட்ட தகுதியில்லை என்றால், பிச்சை எடுத்துக் கட்டுமாறு, உரத்த குரலில் தெரிவித்துள்ளார்.

இது மாத்திரமன்றி பல கிராமங்களில் அலுவலக நேரங்கள் தவிர்ந்த நேரங்களில் செல்லும் நிதி நிறுவன ஊழியர்கள் மக்களிடம் சண்டியர்கள் போல் நடந்துகொள்வதாகவும், வீட்டுப் பாவனைப் பொருட்களைத் தூக்கிச் செல்லப் போவதாக மிரட்டுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Related Posts