கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய, ஹோகந்தரவில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான அன்டனோவ் 32 ரக விமானமே இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்கவிலிருந்து ரத்மலானை நோக்கிப் பயணித்த சில நிமிடங்களிலேயே விமானத்தின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது.
அனைத் தொடர்தே விமானம் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.