மாதகல் மற்றும் மன்னார் கடற்பரப்புகளில் அத்துமீறிய தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்களை தேடி நேற்று கடல் படை முன்னெடுத்த தீவிர தேடுதலில் சுமார் 40 க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரையும் கடல்தொழில் நீரியல் வள திணைக்களத்திடம் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.
மாதகல் கடல் பரப்பில் அத்திமீறி தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என கூறி 21 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று இரவு கைது செய்துள்ளனர்
இவர்கள் அனைவரும் தமிழகத்தின் நாகபட்டினம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் கடற்படையினர் தெரிவித்தனர்.
5 மீன் பிடி படகுகளில் அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவித்தே இவர்கள் கைது செய்யப்பட்டுளார்கள்.
இவர்கள் இன்று யாழ். மாவட்ட நீரியல் வள திணைக்களத்திடம் பாரப்படுத்தப்படுவார்கள் என்றும் இதன்பின்னர் நீதி மன்றில் முட்படுத்தபடுவார்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
இதேவளை மன்னாரில் கைதுசெய்யப்பட்ட 23 மீனவர்களும் இன்று பிற்பகல் 2 மணியளவில் மன்னாருக்கு அழைத்துவரப்பட்டுஇ நீரியல் வள திணைக்களம் ஊடாக நீதிபதி முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று மன்னார் மாவட்டக் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் பி.எஸ்.மிராண்டா தெரிவித்தார்.