அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் நிதி அமைச்சின் அறிவித்தல்!

ஆறு அத்தியாவசிய பொருட்களுக்காக விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக வரி நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்

கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே நிதியமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

அந்தவகையில், இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் கிலோ கிராம் ஒன்றிற்கு விதிக்கப்பட்டுள்ள சிறப்பு சந்தை வரி 39 ரூபாவாலும், பருப்பு கிலோ கிராம் ஒன்றிற்கு விதிக்கப்பட்டுள்ள சிறப்பு சந்தை வரி 12 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் தேங்காய் எண்ணெய் மற்றும் மரக்கறி எண்ணெய் ஒரு லீற்றரின் விலை 25 ரூபாவாலும், கருவாட்டிற்காக விதிக்கப்பட்டுள்ள சிறப்பு சந்தை வரி 50 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

Related Posts