மருந்துகள் முதலான அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு விசியோகிக்க தபால் ஊழியாகளின் உதவியை பெற்றுக்கொள்ள முடியுமா என்பது குறித்து அவசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ஆராயுமாறு தபால் மா அதிபருக்கு தாம் ஆலோசனை வழங்கியிருப்பதாக உயர்கல்வி, தொழில் நுட்பம் புத்தாக்க மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பில் .அமைச்சர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் தற்போது தபால் ஊழிகள் தபால் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. இவர்கள் அந்தந்த பகுதகளைச் சேர்நத மக்ளை நன்கு அறிவர் இதனால் இந்த வநியோகப்பணிகளை சிறப்பாக இவர்களால் மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்த அமைச்சர் அத்தியாவசிய விநியோக நடவடிக்கைகளுக்காக தமது அமைச்சுக்கு உட்பட்ட. தபால் திணைக்களத்தின் வாகனங்களை வழங்குமாறு பிராந்திய தபால் அலுவலங்களுக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் அமைச்சர கூறினார்.
சர்வகட்சி கூட்டத்தில் அரசாங்கம் முன்வைத்த வேலைத்திட்டங்களை எதிர்க்கட்சியினர் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அரசியல் பாகுபாடு இல்லாது அனைவரும் இதனை ஏற்றுக்கொண்டனர். அதேபோல் பாராளுமன்றத்தினை மீண்டும் உடனடியாக கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சி தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்த தேசிய அனர்த்த நிலைமைகளை அரசாங்கம் மிகச் சரியாக கையாண்டு வருகின்றது. எனவே தொடர்ந்தும் அதே வேலைத்திட்டங்கள் சரியாக முன்னெடுக்கப்படும். அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு எதிர்க்கட்சியினரை இணைத்துக்கொள்ளவும் அரசாங்கம் தயாராக உள்ளது.
பாராளுமன்றத்தினை மீண்டும் கூட்டும் தேவை ஏற்படவிடல்லை என்றும் அமைச்சர் கூறினார்
கொரோனா வைரஸ் பரவல் உலகளவில் அனர்த்த நிலையாக மாறியுள்ள வேளையில் இதிலிருந்து மீளும் வேலைத்திட்டத்தில் சகல தரப்பையும்,இணைத்துக்கொண்டு அவர்களின் கருத்துக் காரணிகளை கேட்டு பொதுவான வேலைத்திட்டம் ஒன்றினை உருவாக்குவதில் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய அனைவரும் இணைந்து செயற்பட முடியும் என்றும் உயர்கல்வி, தொழில் நுட்பம் புத்தாக்க மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்.