அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை குறைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு ௦5 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம்முடிவு செய்துள்ளதாகவும், இந்தியாவிலிருந்து ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டு ஒருதொகுதி அரிசி கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்புத் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளை விளக்கும் செய்தியாளர் மாநாட்டில்உரையாற்றிய போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது,.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் 500 அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகளை குறைத்து சதொச விற்பனை நிலையம் ஊடாக விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 வரை விலைக்கழிவு அமுலில் இருக்கும் என தெரிவித்தார்.

Related Posts