அத்தியவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது: நிதி அமைச்சர்

பண்டிகைக் காலங்களில் வர்த்தக நிலையங்களில் அத்தியவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது என, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

வர்த்தக நிலையங்களில் அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக, வௌியான தகவல்களின் உண்மைத் தன்மை குறித்து ஆராய புறக்கோட்டை பகுதிக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த வேளையே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது, அங்கிருந்த வர்த்தகர்களிடம் அமைச்சர் விசாரணை செய்த சந்தர்ப்பத்தில், அரிசிப் பற்றாக்குறை எதுவும் நிலவவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், இதன்போது அமைச்சர் ரிஷாட் பதியூதினும் உடனிருந்ததாக, கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related Posts