அது வசந்த மாளிகை இல்லை, பதுங்குழியே – மஹிந்த ராஜபக்ஷ

அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜெனிவா பிரேரணை சம்பந்தமான விவாதத்தை தான் புறக்கணிக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் தனக்கிருந்த தனிப்பட்ட காரணமொன்றிற்காக அந்த விவாதத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரனையில் பயங்கரமான விடயங்கள் பல குறிப்பிடப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில் நேற்று காலை ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மிகவும் பயங்கரமான மூன்று விடயங்கள் அந்தப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையின் நிலக்கீழ் அதிசொகுசு மாளிகை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர்,

அந்தக் காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்பட்டதால் அவ்வாறானதொரு மாளிகை அமைத்ததாக அவர் கூறினார்.

அவசர நிலமைகளில் பாதுகாப்பு குழு கூட்டங்களை கூட்டுவதற்கு அந்த மாளிகையை பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அது தனது வேண்டுதலுக்கமைய நிர்மாணிக்கப்படவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதுபோன்ற மற்றொரு மாளிகை அலரி மாளிகையிலும் இருக்கின்றது எனவும் இவை பகிரங்கப்படுத்தக் கூடாத விடயங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts