கதிர்காமம் பஸ்நாயக்க நிலமே என்றழைக்கப்படும் கதிர்காமம் ஆலய பொறுப்பாளர் டி.பி.குமாரகே என்பவருக்கு அதிர்ஷ்ட இலாபச்சீட்டில் கிடைக்கப்பெற்ற சுமார் 20 இலட்சம் ரூபாயை, ஆலயத்துக்கே ஒப்படைத்துள்ளார்.
மேற்படி ஆலயத்துக்கு முன்பாக இருந்து வரும் அதிர்ஷ்ட இலாபச்சீட்டு விற்பனை நிலையத்தில் குறித்த ஆலயப் பொறுப்பாளர் ‘மஹாஜன சம்பத’ தேசிய லொத்தர் ஒன்றைப் பெற்றுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி குழுக்கப்பட்ட சீட்டிழுப்பில் இவருக்கு 20 இலட்சம் ரூபாய்க்கான அதிர்ஷ்டம் கிடைக்கப்பெற்றுள்ளது.
கதிர்காமம் ஆலய பொறுப்பாளர் டி.பி.குமாரகே இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது, ‘எனக்கு கிடைக்கப் பெற்ற பணத்தை ஆலய அறக்கட்டளை நிதியத்துக்கு ஒப்படைத்துள்ளேன். இதன் மூலம் யாத்திரிகளுக்கு உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளேன்’ என்றார்.