நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வீட்டு வளவில் முதலாவதாக படையினர் தேடுதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அறிவித்துள்ளார்.
அதன் பின்னர் தவறுதலாக தேடுதல் நடத்திவிட்டோம் என அடுத்த வளவிற்குள் பாதுகாப்பு தரப்பினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அப்பகுதியில் பெருமளவான ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து இவ்வாறு தேடுதல் நடவடிக்கை மேள்கொள்ளப்படுகின்றது.
இதற்காக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த பகுதியில் நோயாளர் காவு வண்டியும் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.