அதிரடி படங்கள் வேண்டாம், காதல் படத்தில் நடிக்க ஆசை : ஜாக்கி சான்

‘குங்பூ யோகா’ படத்தின் ப்ரமோஷன் வேலைகளுக்காக இந்தியா வந்துள்ளார் நடிகர் ஜாக்கி சான். நேற்று காலை மும்பை வந்தடைந்த அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நடிகர் சோனு சூட் விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். அதன்பின்னர் ஜாக்கி சான் கபில் ஷர்மா நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது ஜாக்கி சான் பேசியதாவது,

அதிரடி படங்களில் நடித்து எனக்கு சலித்துவிட்டது. எனவே முழு காதல் படத்தில் நடிக்க ஆசையாக உள்ளது என்று கூறினார்.

அதுவும் பாலிவுட்டில் காதல் படத்தில் நடிக்க ஆசை என்றார். இதற்காக பாலிவுட் இயக்குநர்கள் யாராவது தகுந்த காதல் கதையுடன் என்னை தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்த ஜாக்கி சான், நான் காதல் செய்ய வேண்டும், ரொமான்ஸ் பாட்டுக்கு நடனமாட வேண்டும் என்றார். பாலிவுட்டில் காதல் படத்தில் நடித்தில் நடிக்க நான் கடுமையான முயற்சிகளை செய்து வருகிறேன். ஆனால் எனக்கு ஏற்ற திரைக்கமை இதுவரை அமையவில்லை.

எனினும் 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டிற்கு வந்துள்ளேன். எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியது என்றார்.

ஜாக்கி சான், சோணு சூட் நடிப்பில் உருவாகியுள்ள `குங்பூ யோகா’ படம் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை சீனாவின் ஸ்டான்லி டாங் இயக்கியுள்ளார். மேலும் தமிழில் வெளியான ‘அனேகன்’ படத்தின் கதாநாயகி அமிரா தஸ்துர் ஜாக்கி சானுடன் இணைந்து ‘குங்பூ யோகா’ படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts