அதிரடி நடனமாடி அனுஷ்காவை அதிர வைத்த ரஜினி!

ரஜினி படங்களின் பாடல்கள் எப்போதுமே படு ஸ்பீடாக இருக்கும். அந்த அளவுக்கு சுறுசுறுப்பாக நடனமாடுவார் ரஜினி. அந்தவகையில், தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரண்டு வேடங்களில் நடித்து வரும் லிங்கா படத்திலும் அதே வேகமான பாடல்களை கொடுத்துள்ளாராம் ஏ.ஆர்.ரகுமான்.

Anushka-to-pair-Rajini-in-Kochadaiyaan

அந்த வகையில், தற்போது ரஜினி-அனுஷ்கா இடம்பெறும் ஒரு டூயட் பாடல் காட்சியை ஐதராபாத்தில் பிரமாண்ட செட் போட்டு படமாக்கியிருக்கிறார்கள்.

அப்போது, ரஜினியிடம் பழைய வேகம் இருக்காது என்று ஒட்டுமொத்த யூனிட்டே நினைத்திருக்க, பாடலை காதில் கேட்டதும் அதே வேகத்துக்கு கால்தூக்கி தனது கைகளை தனக்கே உரிய பாணியில் மின்னல் வேகத்தில் அசைத்து நடனமாடினாராம் ரஜினி.

அவரது கைவீச்சுக்கு எல்லா நடிகைகளையும போலவே அனுஷ்காவும் சிறது நேரம் தடுமாறி விட்டாராம். அதையடுத்து அவரது வேகத்துக்கு ஈடுகொடுத்து நடனமாடத் தொடங்கினாராம்.

ஆக, முந்தைய படங்களைப்போலவே லிங்காவிலும் ரஜினியின் அதிர வைக்கும் ஆட்டம் பாட்டங்களுக்கு பஞ்சமிருக்காது என்கிறார்கள்.

இதன் மூலம் தனது நீண்ட நாள் கனவாகிய ரஜினியுடன் டூயட் ஆடும் கனவும் நனவாகியுள்ளதில் தனக்கு மிகுந்த சந்தோஷம் என அனுஷ்க்கா அவர்கள் கூறுயுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related Posts