அதிரடியால் அசத்திய அசேல குணரத்ன : தொடரை கைப்பற்றியது இலங்கை

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் குணரத்னவின் அதிரடி ஆட்டத்தால் வெற்றிபெற்ற இலங்கை அணி, தொடரையும் கைப்பற்றியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆஸி அணி சார்பில் ஹென்ரிக்கியுஸ் 56 ஓட்டங்களையும், கிலிங்கர் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் குலசேகர 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இறுதி பந்தில் தனது வெற்றியை பதிவுசெய்தது.

இந்த போட்டியில் ஆரம்பத்தில் 40 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்து இலங்கை அணி தடுமாறியது.

எனினும் குணரத்ன, கபுகெதர ஜோடி அணிக்கு ஆறுதல் அளித்து.

இந்நிலையில் கபுகெதர 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை கடும் சவாலுக்கு உள்ளானது.

எவ்வாறாயினும் தனியொரு ஆளாக களத்தில் நின்ற குணரத்ன ஆட்டமிழக்காமல் 46 பந்துகளுக்கு 84 ஓட்டங்களை விளாசி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார்.

இதனடிப்படையில் 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

குறித்த இருபதுக்கு-20 தொடர் வெற்றியானது அவுஸ்திரேலியாவில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட 3 ஆவது இருபதுக்கு-20 தொடர் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts