அதிரடியாக ஆடி சதமடித்த திமுத் கருணாரத்ன

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடுகின்றது.

Dimuth Karunaratne

இதில் முதலாவது டெஸ்ட் நேற்று காலை காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

அந்த அணி சார்பில் அதிரடியாக ஆடி வரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன தனது 3வது சர்வதேச டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார் இவர் 135 ஒட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காது களத்தில் உள்ளார் இவருடன் சந்திமால் 72 ஒட்டங்களுடனும் களத்தில் உள்ளார்.

இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 250 ஒட்டங்களைப் பெற்றுள்ளது.

ஆட்டத்தின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடரும்

Related Posts