அதிபர் இடமாற்றத்தால் ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து வட்டு. மத்திய கல்லூரிக்கு இரு நாள்கள் விடுமுறை

வட்டுக்கோட்டை மத்திய கல்லூரிக்கு நேற்றும் இன்றும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று வலிகாம வலயக் கல்விப் பணிப் பாளர் சந்திரராஜா தெரிவித்தார்.

குறித்த பாடசாலையிலிருந்து இட மாற்றம் செய்யப்பட்ட அதிபரை மீண்டும் தமது பாடசாலைக்கு நிய மிக்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக ஏற்பட்ட குழப்ப நிலைமையை அடுத்தே விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்றும் எதிர் வரும் திங்கட்கிழமை தொடக்கம் பாடசாலை வழக்கம்போல் செயற் படும் என்றும் தெரிவித்துள்ள கல்விப் பணிப்பாளர் அன்றையதினம் பெற்றோருடனான சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் பெற்றோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு அவர்களுக்கு நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்தப்படும் என்றும்அவர் குறிப்பிட்டார்.

இடமாற்றம் செய்யப்பட்ட அதிபரை மீண்டும் அதே கல்லூரிக்கு நியமிக்க கோரி மாணவர்கள் நேற்றுமுன்தினமும் வகுப் புப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். அதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டிருந்தது. அதனால் மாகாணக்கல்விப் பணிப்பாளர், கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் அங்கு சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். அதன்பின்னரே பாட சாலையை 2நாள்களுக்கு மூடுவது உள்ளிட்ட முடிவு எடுக்கப்பட்டதாகவும் பெற்றோருடன் கலந்துரையாடிய பின்னர் தீர்மானம் எடுக்கப் படும் என்றும் வலயக்கல்விப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Related Posts