பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர், அதிபர் சங்கங்கள் இணைந்து எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல் நியமனம் எனும் போர்வையில் தகுதியற்றவர்கள் 1000 இற்கும் அதிகமானவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன என்று குற்றஞ்சாட்டி ஆசிரியர் சங்கம் உள்பட கல்விசார் தொழிற்சங்கங்கள் கடந்த 4ஆம் திகதி சுகயீன லீவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும் வடக்கு – கிழக்கு உள்பட நாடுமுழுவதும் இந்தப் போராட்டம் பெரியளவில் வெற்றியளிக்கவில்லை.
இந்த நிலையில் வரும் 26ஆம் திகதி மீண்டும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தயாராகி வருகின்றன.