அரச பாடசாலைகளில் கடமை புரியும் அதிபர்களுக்கு இராணுவக் கல்லூரியில் பயிற்சிச் செயலமர்வை நடாத்துவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது எதிர்ப்பு வௌியிட்டுள்ளது.
மாத்தறை வலயத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளின் அதிபர்களும் ஊவா குடாஓய கமாண்டோ ரெஜிமேன் பயிற்சிக் கல்லூரிக்கு, எதிர்வரும் 22 ஆம் திகதி பயிற்சிக்கு வருமாறு தென் மாகாண கல்வித் திணைக்களத்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைக் கூறியுள்ளார்.