அதிக வேகத்துடன் பயணிக்கும் பஸ்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி ‘1955’ என்ற தொலைபேசி இலக்குத்துடன் தொடர்பு கொண்டு அறியத்தருமாறும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
இவ்வாறு வேகத்துடன் பயணிக்கும் பஸ் வண்டிகளின் சாரதிகளின் சேவையை 3 மாதங்களுக்கு இடைநிறுத்தும் வகையிலான சட்டமொன்று உள்ளதாகவும் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் முறைபாடுகளுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனித மல்லவாராச்சி தெரிவித்துள்ளார்.